×

الأنعام

வசனம் 119

அல்-முக்தஸர்

وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا۟ مِمَّا ذُكِرَ ٱسْمُ ٱللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا ٱضْطُرِرْتُمْ إِلَيْهِ ۗ وَإِنَّ كَثِيرًا لَّيُضِلُّونَ بِأَهْوَآئِهِم بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِٱلْمُعْتَدِينَ ﴿١١٩﴾

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதை உண்பதை விட்டும் எது உங்களைத் தடுக்கிறது. உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்கிவிட்டான். நிர்ப்பந்திக்கப்பட்டாலே தவிர அவற்றை விட்டு விடுவது உங்கள் மீது கடமையாகும். ஏனெனில் நிர்ப்பந்தம் தடை செய்யப்பட்டதை அனுமதிக்கும். இணைவைப்பாளர்களில் பெரும்பாலோர், அறியாமையினால் தங்களின் தவறான கருத்துக்களால் தம்மைப் பின்பற்றுவோரை வழிகெடுக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ் தடை செய்த இறந்தவை போன்றவற்றை அனுமதிக்கிறார்கள். அவன் அனுமதித்த பஹீரா வஸீலா ஹாமீ போன்றவற்றைத் தடைசெய்கிறார்கள். தூதரே! தன் வரம்புகளை மீறக்கூடியவர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்காக அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.