×

الأنعام

வசனம் 114

அல்-முக்தஸர்

أَفَغَيْرَ ٱللَّهِ أَبْتَغِى حَكَمًا وَهُوَ ٱلَّذِىٓ أَنزَلَ إِلَيْكُمُ ٱلْكِتَـٰبَ مُفَصَّلًا ۚ وَٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَعْلَمُونَ أَنَّهُۥ مُنَزَّلٌ مِّن رَّبِّكَ بِٱلْحَقِّ ۖ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ ﴿١١٤﴾

தூதரே! அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் சேர்த்து வணங்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை எனக்கும் உங்களுக்குமிடைய தீர்ப்பாளனாக ஏற்றுக்கொள்வது எவ்வாறு சாத்தியம்? அவன்தான் உங்கள் மீது எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி தெளிவுபடுத்தக்கூடிய குர்ஆனை இறக்கியுள்ளான். தவ்ராத் என்னும் வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களின் வேதங்களில் காணப்படும் ஆதாரங்களினால் குர்ஆன் சத்தியத்தைப் பொதிந்ததாக உமக்கு அல்லாஹ்விடமிருந்து இறக்கப்படுகிறது என்பதை அறிவார்கள். நாம் உமக்கு அறிவித்தவற்றில் சந்தேகம் கொள்வோரில் ஆகிவிடாதீர்.