×

المائدة

வசனம் 97

அல்-முக்தஸர்

جَعَلَ ٱللَّهُ ٱلْكَعْبَةَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ قِيَـٰمًا لِّلنَّاسِ وَٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَٱلْهَدْىَ وَٱلْقَلَـٰٓئِدَ ۚ ذَٰلِكَ لِتَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ ﴿٩٧﴾

கஃபா என்னும் ஆலயத்தை அல்லாஹ் மக்களின் மார்க்கத்தை சீர்ப்படுத்துவதாகவும் வாழ்விற்குப் பாதுகாப்பாகவும் அமைத்துள்ளான். இதனை மையப்படுத்தியே அவர்களின் மார்க்க நலன்களான தொழுகை, ஹஜ், உம்ரா ஆகியவையும் புனித பூமியில் அமைதி, அனைத்து வகையான கனிகளும் கிடைத்தல் போன்ற உலக நலன்களும் நிகழ்கின்றன. (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப்) ஆகிய புனித மாதங்களில் மற்றவர்கள் அவர்களுடன் போரிடுவதிலிருந்து அபயமளிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளான். பலிப்பிராணியையும் ஹரமை நோக்கி கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கு அடையாளமாக கழுத்தில் பட்டைகட்டப்பட்ட பிராணியையும் அதைக்கொண்டு செல்லக்கூடியவர்களுக்கு எந்தத் தீங்கிழைப்பதிலிருந்து அபயமளிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளான். அவ்வாறான அருளை அல்லாஹ் உங்கள் மீது சொரிந்திருப்பது, வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் அறிவான், அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். உங்களுக்கு நலன்கள் ஏற்படுவதற்கும் தீங்குகள் நிகழ முன் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குமுரிய அச்சட்டங்களை அவன் விதியாக்கியமை தனது அடியார்களுக்குப் பொருத்தமானவற்றை அவன் அறிந்துள்ளான் என்பதற்குரிய சான்றாகும்.