அல்-முக்தஸர்
لَا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغْوِ فِىٓ أَيْمَـٰنِكُمْ وَلَـٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ ٱلْأَيْمَـٰنَ ۖ فَكَفَّـٰرَتُهُۥٓ إِطْعَامُ عَشَرَةِ مَسَـٰكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَـٰثَةِ أَيَّامٍ ۚ ذَٰلِكَ كَفَّـٰرَةُ أَيْمَـٰنِكُمْ إِذَا حَلَفْتُمْ ۚ وَٱحْفَظُوٓا۟ أَيْمَـٰنَكُمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَشْكُرُونَ ﴿٨٩﴾
நம்பிக்கையாளர்களே! சத்தியம் செய்வதை நாடாது உங்களின் நாவில் வெளிப்பட்டுவிடும் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களிடம் கணக்குக் கேட்க மாட்டான். நீங்கள் உறுதியான நோக்கத்துடன் செய்யும் சத்தியங்களை முறித்து விட்டால்தான் அவன் உங்களிடம் கணக்குக் கேட்பான். நீங்கள் உள்ளத்தில் உறுதிகொண்டு நாவினால் மொழிந்த சத்தியங்களை முறித்துவிட்டால் பின்வரும் மூன்றில் நீங்கள் விரும்பும் ஒன்றைச் செய்தால் சத்தியத்தை முறித்த பாவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். உங்களின் ஊரிலுள்ள நடுநிலையான உணவிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் (ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு அளவு உணவுப்பொருள் கொடுக்கப்பட வேண்டும்) அல்லது அவர்களுக்கு தகுந்த ஆடை வழங்க வேண்டும் அல்லது நம்பிக்கைகொண்ட ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். தனது சத்தியத்திற்குப் பரிகாரம் செய்வதற்கு மேற்குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் எதையும் பெறாதவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்று பரிகாரம் செய்யட்டும். இதுதான் நீங்கள் முறித்துவிட்ட சத்தியங்களுக்கான பரிகாரமாகும். அல்லாஹ்வின் மீது பொய்ச்சத்தியம் செய்வது, அதிகமாக சத்தியம் செய்வது, சத்தியத்தின் படி செயற்படாமை ஆகியவற்றை விட்டும் உங்களது சத்தியங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். சத்தியத்தின் படி செயற்படாமை சிறந்ததாக இருந்தால் அதனை முறித்துவிடுங்கள். சிறந்ததைச் செய்து உங்களது சத்தியங்களுக்குப் பரிகாரம் செய்து விடுங்கள். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்ததற்காக நீங்கள் அவனுக்கு நன்றிசெலுத்தும்பொருட்டு சத்தியங்களுக்குப் பரிகாரத்தைத் தெளிவுபடுத்தியது போன்று ஹலால், ஹராம் பற்றிய தெளிவான தன் சட்டங்களை அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.