அல்-முக்தஸர்
فَأَثَـٰبَهُمُ ٱللَّهُ بِمَا قَالُوا۟ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلْمُحْسِنِينَ ﴿٨٥﴾
அவர்கள் நம்பிக்கை கொண்டு சத்தியத்தையும் ஏற்றுக் கொண்டதனால் அல்லாஹ் அவர்களுக்குச் சுவனங்களைக் கூலியாகக் கொடுத்தான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுதான் சத்தியத்தைப் பின்பற்றுவதிலும் எவ்வித கட்டுப்பாடும் நிபந்தனையுமின்றி சத்தியத்திற்கு சிறந்த முறையில் கட்டுப்படுபவர்களுக்கான கூலியாகும்.