×

المائدة

வசனம் 80

அல்-முக்தஸர்

تَرَىٰ كَثِيرًا مِّنْهُمْ يَتَوَلَّوْنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ أَنفُسُهُمْ أَن سَخِطَ ٱللَّهُ عَلَيْهِمْ وَفِى ٱلْعَذَابِ هُمْ خَـٰلِدُونَ ﴿٨٠﴾

தூதரே! யூதர்களிலுள்ள இந்த நிராகரிப்பாளர்களில் பெரும்பாலோர் இணைவைப்பாளர்களை நேசிப்பவர்களாகவும் அவர்களின் பக்கம் சாய்வோராகவும் உம்மையும் ஓரிறைவனை வணங்குபவர்களையும் எதிர்ப்பவர்களாகவும் நீர் காண்பீர். நிராகரிப்பாளர்களுடன் நட்புக்கொள்வதற்கு அவர்கள் முன்வருவது மோசமானதாகும். அதுவே அல்லாஹ் அவர்கள் மீது கோபம்கொண்டு அவர்களை நரகத்தில் நுழைவிப்பதற்கான காரணமாகும். அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேறவே முடியாது. அங்கு அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அதிலிருந்து அவர்கள் ஒரு போதும் வெளியேற முடியாது.