×

المائدة

வசனம் 68

அல்-முக்தஸர்

قُلْ يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لَسْتُمْ عَلَىٰ شَىْءٍ حَتَّىٰ تُقِيمُوا۟ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ ۗ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُم مَّآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَـٰنًا وَكُفْرًا ۖ فَلَا تَأْسَ عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ ﴿٦٨﴾

தூதரே! நீர் கூறுவீராக: “யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களே! தவ்ராத்தின்படியும் இன்ஜீலின்படியும் அல்லாஹ் உங்களுக்கு இறக்கிய குர்ஆனின்படியும் நீங்கள் செயல்படும் வரை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க எந்த மார்க்கத்திலும் இல்லை. அல்குர்ஆனை நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயற்படாவிட்டால் உங்களது நம்பிக்கை செல்லுபடியாகாது. உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை வேதக்காரர்களில் பெரும்பாலானோருக்கு - அவர்களின் பொறாமையினால்- வரம்பு மீறலையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்துகிறது. இந்த நிராகரிப்பாளர்களுக்காக நீர் கவலை கொள்ளாதீர். உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களே உமக்குப் போதுமானவர்கள்.