×

المائدة

வசனம் 48

அல்-முக்தஸர்

وَأَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ ٱلْكِتَـٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ ۖ فَٱحْكُم بَيْنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ ٱلْحَقِّ ۚ لِكُلٍّ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَٰحِدَةً وَلَـٰكِن لِّيَبْلُوَكُمْ فِى مَآ ءَاتَىٰكُمْ ۖ فَٱسْتَبِقُوا۟ ٱلْخَيْرَٰتِ ۚ إِلَى ٱللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ ﴿٤٨﴾

தூதரே! நாம் உம்மீது சந்தேகமின்றி உண்மையைக் கொண்டுள்ள குர்ஆனை இறக்கியுள்ளோம். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததது என்பதில் ஒரு சிறு சந்தேகமேனும் இல்லை. தனக்கு முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாகவும் அவற்றை நம்பத்தகுந்ததாக ஆக்குவதாகவும் இருக்கின்றது. அவற்றில் குர்ஆனோடு ஒத்துப்போகக்கூடியது உண்மையானதாகும், அதனோடு மாறுபடக்கூடியது பொய்யானதாகும். அதில் அல்லாஹ் உமக்கு இறக்கியதன்படி நீர் மக்களிடையே தீர்ப்பளிப்பீராக. உமக்கு இறக்கப்பட்ட சந்தேகமற்ற சத்தியத்தை விட்டுவிட்டு அவர்கள் பின்பற்றுகின்ற அவர்களின் மனவிருப்பங்களைப் பின்பற்றாதீர். ஒவ்வொரு சமூகத்திற்கும் செயன்முறை சட்டதிட்ட முறையையும் நேர்வழி நடப்பதற்கான தெளிவான பாதையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ், அனைவருக்கும் ஒரே வழிமுறையை ஏற்படுத்த நாடியிருந்தால் ஒரே வழிமுறையை ஏற்படுத்தியிருப்பான். ஆயினும் அவன் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு வழிமுறையை ஏற்படுத்தியுள்ளான், அனைவரையும் சோதித்து கீழ்ப்படிபவர் யார்? மாறுசெய்பவர் யார்? என்பது தெளிவாவதற்காக. எனவே நன்மையான செயல்களின் பக்கம், பாவங்களை விட்டொழிப்பதன் பக்கம் விரையுங்கள். மறுமைநாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்ப வேண்டும். நீங்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். நீங்கள் முற்படுத்தி அனுப்பிவைத்த செயல்களின் அடிப்படையில் அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.