அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلرَّسُولُ لَا يَحْزُنكَ ٱلَّذِينَ يُسَـٰرِعُونَ فِى ٱلْكُفْرِ مِنَ ٱلَّذِينَ قَالُوٓا۟ ءَامَنَّا بِأَفْوَٰهِهِمْ وَلَمْ تُؤْمِن قُلُوبُهُمْ ۛ وَمِنَ ٱلَّذِينَ هَادُوا۟ ۛ سَمَّـٰعُونَ لِلْكَذِبِ سَمَّـٰعُونَ لِقَوْمٍ ءَاخَرِينَ لَمْ يَأْتُوكَ ۖ يُحَرِّفُونَ ٱلْكَلِمَ مِنۢ بَعْدِ مَوَاضِعِهِۦ ۖ يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَـٰذَا فَخُذُوهُ وَإِن لَّمْ تُؤْتَوْهُ فَٱحْذَرُوا۟ ۚ وَمَن يُرِدِ ٱللَّهُ فِتْنَتَهُۥ فَلَن تَمْلِكَ لَهُۥ مِنَ ٱللَّهِ شَيْـًٔا ۚ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ لَمْ يُرِدِ ٱللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمْ ۚ لَهُمْ فِى ٱلدُّنْيَا خِزْىٌ ۖ وَلَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ عَذَابٌ عَظِيمٌ ﴿٤١﴾
தூதரே! உம்மைக் கோபமூட்டுவதற்காக நிராகரிப்பான செயல்களில் மும்முரமாக ஈடுபடும் ஈமானை வெளிப்படுத்திக் கொண்டு நிராகரிப்பை மறைத்துவைத்துள்ள நயவஞ்சகர்களும், தமது தலைவர்களின் பொய்யை அதிகமாக செவிமடுத்து அதனை ஏற்கக்கூடிய யூதர்களும் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் உம்மைப் புறக்கணித்து உம்மிடம் சமூகம் தராத தங்களின் தலைவர்களை குருட்டுத்தனமாக பின்பற்றுவோராக உள்ளனர். அந்த யூதத் தலைவர்கள் தவ்ராத்திலுள்ள அல்லாஹ்வின் வார்த்தையை தங்களின் மனோஇச்சைக்கேற்ப மாற்றிவிடுகிறார்கள். அவர்கள் தங்களைப் பின்பற்றுவோரிடம் கூறுகிறார்கள், “முஹம்மது கூறுவது உங்களின் மனவிருப்பங்களுக்கு ஒத்ததாக இருந்தால் அவரைப் பின்பற்றுங்கள். அது உங்களின் விருப்பங்களுக்கு எதிரானதாக இருந்தால் அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.” தூதரே! யாரை அல்லாஹ் வழிகெடுக்க நாடிவிட்டானோ யாராலும் அவருக்கு நேரான வழியைக் காட்டிவிட முடியாது. இந்த பண்புகளையுடைய நயவஞ்சகர்கள் மற்றும் யூதர்கள் ஆகியோரின் உள்ளங்களை அல்லாஹ் நிராகரிப்பிலிருந்து பரிசுத்தப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும் கேவலமும் மறுமையில் நரக வேதனையான கடுமையான வேதனையும் உண்டு.