அல்-முக்தஸர்
يَسْـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمْ ۖ قُلْ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَـٰتُ ۙ وَمَا عَلَّمْتُم مِّنَ ٱلْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُ ۖ فَكُلُوا۟ مِمَّآ أَمْسَكْنَ عَلَيْكُمْ وَٱذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهِ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ ﴿٤﴾
தூதரே! உம் தோழர்கள் உம்மிடம், ‘உண்பதற்குத் தமக்கு அனுமதிக்கப்பட்டவை எவை?’ என்று கேட்கிறார்கள். தூதரே! நீர் கூறுவீராக: “தூய்மையான அனைத்து உணவுகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. பயிற்றுவிக்கப்பட்ட கூரிய பற்களையுடைய நாய், சிறுத்தை, கூரிய நகங்களுடைய கழுகு போன்றவை வேட்டையாடியவற்றையும் நீங்கள் உண்ணலாம். நீங்கள்தாம் அவற்றிற்கு வேட்டையாடக் கற்றுக் கொடுக்கிறீர்கள். வேட்டையாடும் ஒழுங்குகளைப் பற்றிய அறிவை அல்லாஹ்தான் உங்களுக்கு வழங்கினான். அவ்வேட்டைப் பிராணிகள், சொல்வதைச் செயற்படுத்தி தடுப்பதைத் தவிர்க்குமளவு பயிற்சி பெற்றுவிட்டால் அவை வேட்டையாடுபவை இறந்து விட்டாலும் அதனை நீங்கள் உண்ணுங்கள். அவற்றை வேட்டைக்கு அனுப்பும்போது அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் செயல்களுக்கு விரைவாக கணக்கு தீர்ப்பவன்.