அல்-முக்தஸர்
قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ ۛ أَرْبَعِينَ سَنَةً ۛ يَتِيهُونَ فِى ٱلْأَرْضِ ۚ فَلَا تَأْسَ عَلَى ٱلْقَوْمِ ٱلْفَـٰسِقِينَ ﴿٢٦﴾
அல்லாஹ் தன் தூதரான மூஸாவிடம் கூறினான்: “இஸ்ராயீலின் மக்களின் மீது நாற்பது வருடங்கள் வரை புனித பூமியில் நுழைவதை அல்லாஹ் தடைசெய்துவிட்டான். இக்காலத்தில் அவர்கள் பாலைவனத்தில் வழிதெரியாமல் தடுமாறித்திரிவார்கள். மூஸாவே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத இந்த மக்களுக்காக கவலைகொள்ளாதீர். ஏனெனில் இவர்கள் தாம் சம்பாதித்த பாவங்களின் காரணமாகத்தான் தண்டிக்கப்படுவார்கள்.