அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُحِلُّوا۟ شَعَـٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَلَا ٱلْهَدْىَ وَلَا ٱلْقَلَـٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِّن رَّبِّهِمْ وَرِضْوَٰنًا ۚ وَإِذَا حَلَلْتُمْ فَٱصْطَادُوا۟ ۚ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ أَن صَدُّوكُمْ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ أَن تَعْتَدُوا۟ ۘ وَتَعَاوَنُوا۟ عَلَى ٱلْبِرِّ وَٱلتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا۟ عَلَى ٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ ﴿٢﴾
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு மதிக்குமாறு கட்டளையிட்ட புனிதங்களை அவமதித்துவிடாதீர்கள். தைத்த ஆடைகளை அணிவது போன்ற இஹ்ராம் அணிந்த நிலையில் தடைசெய்யப்பட்டவற்றை விட்டும் வேட்டையாடுவது போன்ற புனிதப் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்டவற்றையும் தவிர்ந்துகொள்ளுங்கள். புனிதமான மாதங்களில் போர் புரியாதீர்கள். (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகியவை புனித மாதங்களாகும்) புனிதப்பிரதேச எல்லையில் அல்லாஹ்வுக்காக பலியிடுவதற்கு வழங்கப்பட்ட கால்நடைகளை அபகரிப்பதன் மூலமோ அது அடையவேண்டிய இடத்தைவிட்டுத் தடுப்பதன் மூலமோ அதனை ஆகுமாக்கிக்கொள்ளாதீர்கள். பலிப்பிராணி என்று உணர்த்தப்படுவதற்காக கழுத்தில் பட்டை கட்டப்பட்ட பிராணியையும், அல்லாஹ்வின் திருப்தியையும் வியாபார நலனையும் கருத்தில்கொண்டு கஃபா என்றும் இறையில்லத்தை நாடி வருவோரையும் ஆகுமாக்கிக்கொள்ளாதீர்கள். இஹ்ராமிலிருந்து நீங்கள் விடுபட்டு, புனிதப் பிரதேச எல்லையிலிருந்து நீங்கள் வெளியேறிவிட்டால் நீங்கள் நாடினால் வேட்டையாடிக் கொள்ளலாம். மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பு அவர்களுடன் நீதமாக நடந்துகொள்ளாது அநியாயம் இழைப்பதற்கு உங்களைத் தூண்டிவிட வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஏவப்பட்ட நல்லவற்றைச் செய்வதற்கும் தடுக்கப்பட்ட தீயவற்றை விட்டுத் தவிர்ந்திருப்பதற்கும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவங்களில் ஈடுபடவும் மக்களின் உயிர் உடமை மானம் ஆகியவற்றில் அத்துமீறுவதற்கும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து, அவனுக்கு மாறுசெய்வதிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன். எனவே அவனது தண்டனையிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்.