அல்-முக்தஸர்
يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ قَدْ جَآءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ عَلَىٰ فَتْرَةٍ مِّنَ ٱلرُّسُلِ أَن تَقُولُوا۟ مَا جَآءَنَا مِنۢ بَشِيرٍ وَلَا نَذِيرٍ ۖ فَقَدْ جَآءَكُم بَشِيرٌ وَنَذِيرٌ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ﴿١٩﴾
வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களே! தூதர்கள் அற்ற ஒரு இடைவெளிக்குப் பிறகு, ஓரு தூதர் அனுப்பப்படுவதற்கான கடும் தேவை நிலவியதன் பின்னால் நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உங்களிடம் வந்துள்ளார். ஏனெனில், நன்மையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடிய தண்டனையைக் கொண்டு எச்சரிக்கை செய்யக்கூடிய எந்தத் தூதரும் எங்களிடம் வரவில்லை என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காகத்தான். உங்களிடம் நன்மையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியவராகவும் தண்டனையைக் கொண்டு எச்சரிக்கை செய்யக்கூடியவராகவும் முஹம்மது வந்துவிட்டார். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனைவிட்டுத் தப்பிவிட முடியாது. தூதர்களை அனுப்புவதும் தூதுத்துவத்தை முஹம்மதைக் கொண்டு நிறைவு செய்வதும் அவனது ஆற்றலில் உள்ளடங்கியவைதான்.