அல்-முக்தஸர்
وَمِنَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّا نَصَـٰرَىٰٓ أَخَذْنَا مِيثَـٰقَهُمْ فَنَسُوا۟ حَظًّا مِّمَّا ذُكِّرُوا۟ بِهِۦ فَأَغْرَيْنَا بَيْنَهُمُ ٱلْعَدَاوَةَ وَٱلْبَغْضَآءَ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ ۚ وَسَوْفَ يُنَبِّئُهُمُ ٱللَّهُ بِمَا كَانُوا۟ يَصْنَعُونَ ﴿١٤﴾
யூதர்களிடம் உறுதியான வாக்குறுதியைப் பெற்றதைப் போன்றே தங்களைத் தாங்களே தூய்மையானவர்கள் என்று கூறிக் கொண்ட ஈஸாவைப் பின்பற்றியவர்களிடமும் உறுதியான வாக்குறுதி வாங்கினோம். யூதர்கள் செய்ததைப் போன்றே தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரையில் ஒரு பகுதியின்படி செயல்படுவதை இவர்களும் விட்டுவிட்டார்கள். நாம் அவர்களிடையே பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்தினோம். அவர்கள் ஒருவர் மற்றவரை காஃபிர் என்று கூறி சண்டையிடக்கூடியவர்களாகி விட்டார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை விரைவில் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.