அல்-முக்தஸர்
قَالَ ٱللَّهُ هَـٰذَا يَوْمُ يَنفَعُ ٱلصَّـٰدِقِينَ صِدْقُهُمْ ۚ لَهُمْ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۚ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ ﴿١١٩﴾
அல்லாஹ் ஈஸாவிடம் கூறினான்: “இந்த நாள் எண்ணங்களிலும் செயல்களிலும் வார்த்தைகளிலும் உண்மையானவர்களுக்கு அவர்களது வாய்மை பயனளிக்கக்கூடிய நாளாகும். அவர்களுக்குச் சுவனங்கள் உண்டு. அவற்றின் மரங்களுக்கும் மாளிகைகளுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். மரணம் அவர்களுக்கு ஏற்படாது. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொண்டான். இனி அவன் ஒருபோதும் அவர்கள் மீது கோபம் கொள்ள மாட்டான். அவர்களும் தங்களுக்குக் கிடைத்த நிலையான அருட்கொடைகளின் காரணமாக அவனைப் பொருந்திக்கொண்டனர். இந்தக் கூலியும் இறை திருப்தியுமே மிகப் பெரிய வெற்றியாகும். இதற்கு இணையான வேறு எதுவும் இல்லை.