×

المائدة

வசனம் 112

அல்-முக்தஸர்

إِذْ قَالَ ٱلْحَوَارِيُّونَ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ ٱلسَّمَآءِ ۖ قَالَ ٱتَّقُوا۟ ٱللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿١١٢﴾

ஹவாரிய்யீன்கள் பின்வருமாறு கூறியதை நினைத்துப் பார்ப்பீராக: “நீர் பிரார்த்தனை செய்தால், உமது இறைவன் வானத்திலிருந்து ஓர் உணவுத்தட்டை இறக்க முடியுமா?” அதற்கு ஈஸா, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறும் அவர்களுக்கு அது சோதனையாக அமையலாம் என்பதனால் இதுபோன்ற கேள்விகளை விட்டுவிடுமாறும் அவர்களிடம் கூறினார். “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் வாழ்வாதாரம் வேண்டுவதில் உங்கள் இறைவனின் மீது முழுமையாக நம்பிக்கை வையுங்கள்” என்றும் அவர் கூறினார்.