×

المائدة

வசனம் 11

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَن يَبْسُطُوٓا۟ إِلَيْكُمْ أَيْدِيَهُمْ فَكَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ ﴿١١﴾

விசுவாசம் கொண்டவர்களே! உங்கள் உள்ளத்தாலும் நாவாலும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். எதிரிகள் உங்களைத் தாக்க நாடியபோது உங்களுக்கு அமைதியை அளித்து உங்கள் எதிரிகளின் உள்ளத்தில் பயத்தினை உண்டாக்கினான். உங்களை விட்டும் அவர்களைத் திருப்பி உங்களைக் காப்பாற்றினான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நம்பிக்கையாளர்கள் தங்களின் உலக மற்றும் மார்க்க விவகாரங்களில் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.