×

المائدة

வசனம் 108

அல்-முக்தஸர்

ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن يَأْتُوا۟ بِٱلشَّهَـٰدَةِ عَلَىٰ وَجْهِهَآ أَوْ يَخَافُوٓا۟ أَن تُرَدَّ أَيْمَـٰنٌۢ بَعْدَ أَيْمَـٰنِهِمْ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱسْمَعُوا۟ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَـٰسِقِينَ ﴿١٠٨﴾

சாட்சியத்தில் சந்தேகம் ஏற்படும் போது தொழுகைக்குப் பிறகு இரு சாட்சிகளிடமும் சத்தியம் பெறுவது இருவரின் சாட்சியங்களை மறுப்பது ஆகியவையே அவ்விருவரும் மார்க்க முறைப்படி சாட்சியம் கூறுவதற்கு வழிவகுக்கும். எனவே அவர்கள் சாட்சியத்தை திரித்துவிடவோ மாற்றிவிடவோ அதில் துரோகமிழைத்துவிடவோ மாட்டார்கள். அனந்தரக்காரர்களின் சத்தியங்களினால் தங்களின் சத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுவிடுமோ தாங்கள் இழிவுபடுத்தப்பட்டுவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சுவதற்கும் இதுதான் சிறந்த வழிமுறையாகும். சாட்சியத்திலும் சத்தியத்திலும் பொய் கூறுவதையும் மோசடி செய்வதையும் தவிர்த்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏவப்பட்ட விஷயங்களைச் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவிசாய்த்துக் கேளுங்கள். தனக்குக் கட்டுப்பட மறுப்பவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.