×

المائدة

வசனம் 103

அல்-முக்தஸர்

مَا جَعَلَ ٱللَّهُ مِنۢ بَحِيرَةٍ وَلَا سَآئِبَةٍ وَلَا وَصِيلَةٍ وَلَا حَامٍ ۙ وَلَـٰكِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ ۖ وَأَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ ﴿١٠٣﴾

அல்லாஹ் உங்களுக்கு கால்நடைகளை அனுமதிக்கப்பட்டதாக ஆக்கியுள்ளான். இணைவைப்பாளர்கள் தமது சிலைகளுக்காக தங்களுக்குத் தாங்களே தடைசெய்து கொண்டவற்றை அவன் தடைசெய்யவில்லை. பஹீரா - குறிப்பிட்ட குட்டிகளை ஈன்ற பின்னர் காது அறுக்கப்பட்ட பெண் ஒட்டகம், சாயிபா - குறிப்பிட்ட வயதினை அடைந்த, சிலைகளுக்காக நேர்ந்துவிடப்பட்ட பெண் ஒட்டகம், வஸீலா - தொடர்ந்து பெண் குட்டிகளை ஈன்ற ஒட்டகம், ஹாமீ - பல ஒட்டகங்கள் உருவாவதற்குக் காரணமான ஆண் ஒட்டகம் இவையனைத்தையும் அல்லாஹ் தடைசெய்துவிட்டதாக இணைவைப்பாளர்கள் அபாண்டமாகக் கூறினார்கள். நிராகரிப்பாளர்களில் பெரும்பாலோர் சத்தியத்தையும் அசத்தியத்தையும் அனுமதிக்கப்பட்டவற்றையும் தடைசெய்யப்பட்டவற்றையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.