×

النساء

வசனம் 97

அல்-முக்தஸர்

إِنَّ ٱلَّذِينَ تَوَفَّىٰهُمُ ٱلْمَلَـٰٓئِكَةُ ظَالِمِىٓ أَنفُسِهِمْ قَالُوا۟ فِيمَ كُنتُمْ ۖ قَالُوا۟ كُنَّا مُسْتَضْعَفِينَ فِى ٱلْأَرْضِ ۚ قَالُوٓا۟ أَلَمْ تَكُنْ أَرْضُ ٱللَّهِ وَٰسِعَةً فَتُهَاجِرُوا۟ فِيهَا ۚ فَأُو۟لَـٰٓئِكَ مَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ وَسَآءَتْ مَصِيرًا ﴿٩٧﴾

முஸ்லிமல்லாத அந்நிய நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயராமல் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது அவர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களிடம் கேட்பார்கள், “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்; இணைவைப்பாளர்களை விட்டும் எவ்விதத்தில் நீங்கள் வேறுபட்டிருந்தீர்கள்?” அதற்கு அவர்கள், “நாங்கள் பலவீனர்களாக இருந்தோம். எங்களிடம் எம்மை் பாதுகாத்துக்கொள்ளுமளவு எந்தப் பலமும் இருக்கவில்லை ” என்று சாட்டுப்போக்குக் கூறுவார்கள். வானவர்கள் அவர்களைப் பழித்துக் கூறுவார்கள், “அல்லாஹ்வின் பூமி விசாலமாக இருக்கவில்லையா? நீங்கள் புலம்பெயர்ந்து அங்குசென்று உங்களின் மார்க்கத்தையும் இழிவிலிருந்தும் அடக்குமுறையலிருந்தும் உங்களையும் பாதுகாத்திருக்கலாம் அல்லவா?”. புலம்பெயராத இவர்களின் தங்குமிடம் நரகம்தான். அது மிகவும் மோசமான தங்குமிடமாகவும் திரும்புமிடமாகவும் இருக்கின்றது.