அல்-முக்தஸர்
فَقَـٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفْسَكَ ۚ وَحَرِّضِ ٱلْمُؤْمِنِينَ ۖ عَسَى ٱللَّهُ أَن يَكُفَّ بَأْسَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ وَٱللَّهُ أَشَدُّ بَأْسًا وَأَشَدُّ تَنكِيلًا ﴿٨٤﴾
தூதரே! அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அவனுடைய பாதையில் போர் புரிவீராக. மற்றவர்களைக் குறித்து நீர் விசாரிக்கப்பட மாட்டீர். அது உங்களுக்கு அவசியமுமற்றது. ஏனெனில் உம்மை மட்டுமே நீர் போரில் ஈடுபடுத்த முடியும். நம்பிக்கையாளர்களுக்கு போர் புரிய ஆர்வமூட்டுவீராக. அல்லாஹ் உங்களின் போராட்டத்தைக் கொண்டு நிராகரிப்பாளர்களின் பலத்தை தடுத்துவிடலாம். அவன்தான் அதிக வல்லமைமிக்கவனாகவும் கடுந்தண்டனை அளிப்பவனாகவும் இருக்கின்றான்.