×

النساء

வசனம் 77

அல்-முக்தஸர்

أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوٓا۟ أَيْدِيَكُمْ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ ٱلْقِتَالُ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ ٱلنَّاسَ كَخَشْيَةِ ٱللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوا۟ رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا ٱلْقِتَالَ لَوْلَآ أَخَّرْتَنَآ إِلَىٰٓ أَجَلٍ قَرِيبٍ ۗ قُلْ مَتَـٰعُ ٱلدُّنْيَا قَلِيلٌ وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ لِّمَنِ ٱتَّقَىٰ وَلَا تُظْلَمُونَ فَتِيلًا ﴿٧٧﴾

தூதரே! உம்மிடம், “எங்கள்மீது போர் கடமையாக்கப்படக்கூடாதா” என்று கேட்ட உமது சில தோழர்களைக் குறித்து உமக்குத் தெரியுமா? அவர்களிடம் கூறப்பட்டது: “போர் புரியாமல் கைகளைத் தடுத்துக் கொள்ளுங்கள். தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஸகாத்தை வழங்கி வாருங்கள்.” இது போர் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் உள்ள நிலமையாகும். அதன் பின் மதீனாவை நோக்கி புலம்பெயர்ந்து இஸ்லாத்திற்கு பலம் கிடைத்தவுடன், போர் அவர்கள் மீது கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலருக்கு அது சிரமமாகத் தோன்றியது. அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதுபோன்று அல்லது அதைவிட அதிகமாக மக்களுக்கு அஞ்சுவோராக மாறிவிட்டனர். அவர்கள் கூறினார்கள், எங்கள் இறைவா! எங்கள்மீது ஏன் போரைக் கடமையாக்கினாய்? நாங்கள் இவ்வுலகில் அனுபவிக்கும்வரை இன்னும் சிறிதுகாலம் அதனைத் தாமதப்படுத்தியிருக்கக்கூடாதா?” தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: எவ்வளவுதான் இவ்வுலக இன்பங்கள் இருந்தாலும் அவைகள் அழியக்கூடிய அற்ப இன்பங்களேயாகும். அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நிலையான இன்பங்களே சிறந்ததாகும். உங்களின் நன்மைகளில் எதுவும் குறைக்கப்படாது. அது பேரீச்சங்கொட்டையின் நூலளவாக இருந்தாலும் சரியே.”