×

النساء

வசனம் 75

அல்-முக்தஸர்

وَمَا لَكُمْ لَا تُقَـٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلْوِلْدَٰنِ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ أَخْرِجْنَا مِنْ هَـٰذِهِ ٱلْقَرْيَةِ ٱلظَّالِمِ أَهْلُهَا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا ﴿٧٥﴾

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் பலவீனமான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காகவும் அவனுடைய பாதையில் போர் புரிவதை விட்டும் உங்களை தடுப்பது யாது? அந்தப் பலவீனமானவர்கள், “மக்காவிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக. அங்கு வசிக்கக்கூடியவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்து அவனுடைய அடியார்களின்மீது வரம்பு மீறும் அநியாயக்காரர்களாக இருக்கின்றார்கள். எங்களைப் பராமரித்துப் பாதுகாக்கக்கூடியவரையும், எங்களை விட்டும் தீங்கைத் தடுக்கும் உதவியாளரையும் உன் புறத்திலிருந்து ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.