×

النساء

வசனம் 6

அல்-முக்தஸர்

وَٱبْتَلُوا۟ ٱلْيَتَـٰمَىٰ حَتَّىٰٓ إِذَا بَلَغُوا۟ ٱلنِّكَاحَ فَإِنْ ءَانَسْتُم مِّنْهُمْ رُشْدًا فَٱدْفَعُوٓا۟ إِلَيْهِمْ أَمْوَٰلَهُمْ ۖ وَلَا تَأْكُلُوهَآ إِسْرَافًا وَبِدَارًا أَن يَكْبَرُوا۟ ۚ وَمَن كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ ۖ وَمَن كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِٱلْمَعْرُوفِ ۚ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَٰلَهُمْ فَأَشْهِدُوا۟ عَلَيْهِمْ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبًا ﴿٦﴾

பொறுப்பாளர்களே! அவர்கள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களின் செல்வங்களிலிருந்து சிறிது வழங்கி அவர்களை சோதித்துப் பாருங்கள். அவர்கள் அதனை நல்லமுறையில் கையாண்டால், நீங்கள் அவர்களிடம் பக்குவத்தைக் கண்டால் அவர்களின் செல்வங்களை முழுமையாக அவர்களிடம் வழங்கிவிடுங்கள். உங்களுக்கு தேவை ஏற்பட்டால் அல்லாஹ் எடுத்துக்கொள்ள அனுமதித்த அளவை மீறி அவர்களின் செல்வங்களிலிருந்து உண்டுவிடாதீர்கள். அவர்கள் பருவ வயதை அடைந்து சொத்துக்களை எடுத்துக்கொள்வார்கள் என்ற பயத்தால் அவசர அவசரமாக விழுங்கிவிடாதீர்கள்.போதுமான அளவு செல்வத்தைப் பெற்றிருப்பவர் அவர்களின் செல்வங்களை எடுக்காது தவிர்ந்துகொள்ளட்டும். உங்களில் ஏழ்மைநிலையில் இருப்பவர் தேவைக்கேற்ப அவர்களின் செல்வங்களிலிருந்து உண்டுகொள்ளட்டும். அவர்கள் பருவ வயதை அடைந்து பக்குவத்தையும் பெற்ற பின் அவர்களின் செல்வத்தை அவர்களின் வசம் ஒப்படைக்கும்போது உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும் கருத்து வேறுபாடுகளைக் களையும் பொருட்டும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வே இதற்கு சாட்சியாளனாக இருப்பதற்கும் அடியார்களின் செயல்களுக்குக் கணக்குத் தீர்ப்பதற்கும் போதுமானவன்.