×

النساء

வசனம் 59

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَأُو۟لِى ٱلْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَـٰزَعْتُمْ فِى شَىْءٍ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا ﴿٥٩﴾

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் - அவர்கள் பாவமான விஷயங்களை ஏவாதவரை - கட்டுப்படுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் ஏதேனும் விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டால் அல்லாஹ்வின் வேதத்தின் பக்கமும் அவனுடைய தூதரின் வழிமுறையின் பக்கமும் திரும்புங்கள். நீங்கள் கருத்து வேறுபாட்டில் தொடர்ந்திருப்பது, சொந்தக் கருத்தைக் கூறுவது ஆகியவற்றை விட குர்ஆனின் பக்கமும் சுன்னாவின் பக்கமும் திரும்புவதே சிறந்ததாகும். அதுவே உங்களுக்கு சிறந்த முடிவையும் தரக்கூடியதாகும்.