அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقْرَبُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنتُمْ سُكَـٰرَىٰ حَتَّىٰ تَعْلَمُوا۟ مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِى سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا۟ ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰٓ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَآءَ أَحَدٌ مِّنكُم مِّنَ ٱلْغَآئِطِ أَوْ لَـٰمَسْتُمُ ٱلنِّسَآءَ فَلَمْ تَجِدُوا۟ مَآءً فَتَيَمَّمُوا۟ صَعِيدًا طَيِّبًا فَٱمْسَحُوا۟ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا ﴿٤٣﴾
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் போதையில் இருக்கும்போது போதைதெளியும்வரை, நீங்கள் கூறுவதை அறிந்துகொள்ளும்வரை தொழாதீர்கள். இது மது தடைசெய்யப்படுவதற்கு முன்னால் உள்ள நிலை. நீங்கள் குளிப்பு அவசியமான நிலையில் இருக்கும்போது குளிக்கும் வரை தொழவோ, தரிக்காமல் கடந்துசெல்வதற்காகவே தவிர பள்ளிவாயில்களில் நுழையவோ வேண்டாம். நீங்கள் நோய்வாய்ப்பட்டு உங்களால் தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லையெனில் அல்லது நீங்கள் பயணத்தில் இருந்தால் அல்லது நீங்கள் மலஜலம் கழித்துவிட்டுவந்தால் அல்லது உங்கள் மனைவியுன் உடலுறவு கொண்டால் அப்போது நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையெனில் தூய்மையான மண்ணை எடுத்து, அதனால் உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக்கொள்ளுங்கள். நிச்சயாக அல்லாஹ் உங்களின் குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடியவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.