×

النساء

வசனம் 36

அல்-முக்தஸர்

وَٱعْبُدُوا۟ ٱللَّهَ وَلَا تُشْرِكُوا۟ بِهِۦ شَيْـًٔا ۖ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَـٰنًا وَبِذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَٱلْجَارِ ذِى ٱلْقُرْبَىٰ وَٱلْجَارِ ٱلْجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلْجَنۢبِ وَٱبْنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَـٰنُكُمْ ۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا ﴿٣٦﴾

அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு அவனை மட்டுமே வணங்குங்கள். அவனைத்தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள். தாய்தந்தையரை கௌரவித்து, பணிவிடை செய்து நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். உறவினர்கள், ஏழைகள், அநாதைகள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் தோழர், பிரயாணத்தின் இடைநடுவில் அநாதரவாகிவிட்ட வழிப்போக்கன், உங்களின் அடிமைகள் ஆகியோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். தற்பெருமை மிக்கவனையும், தனது அடியார்களுடன் அகங்காரத்துடன் நடந்துகொள்பவனையும், மக்களிடம் பெருமையடிப்பதற்காக தன்னைத்தானே புகழ்ந்து கொள்பவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.