×

النساء

வசனம் 34

அல்-முக்தஸர்

ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ وَبِمَآ أَنفَقُوا۟ مِنْ أَمْوَٰلِهِمْ ۚ فَٱلصَّـٰلِحَـٰتُ قَـٰنِتَـٰتٌ حَـٰفِظَـٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ ٱللَّهُ ۚ وَٱلَّـٰتِى تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَٱهْجُرُوهُنَّ فِى ٱلْمَضَاجِعِ وَٱضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا۟ عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا ﴿٣٤﴾

அல்லாஹ் ஆண்களுக்கு வழங்கியுள்ள பிரத்யேக சிறப்புகள் காரணமாகவும், பெண்களுக்கு செலவளித்து அவர்களது காரியங்களைக் கவனிப்பது அவர்கள் மீதே கடமை என்பதனாலும் ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்களாவர். நல்ல பெண்கள் தங்கள் இறைவனுக்குக் கட்டுப்படுவார்கள். தங்களின் கணவனின் சொல்படியும் நடப்பார்கள். அவர்கள் இல்லாத சமயத்தில் அல்லாஹ்வின் உதவியினால் தங்கள் கற்பை பாதுகாத்துக் கொள்வார்கள். கணவர்களே! சொல்லிலோ செயலிலோ தமது கணவனுக்குக் கட்டுப்படமாட்டாள் என்று நீங்கள் அஞ்சும் பெண்களுக்கு முதலில் உபதேசம் செய்து அல்லாஹ்வைக் கொண்டு அச்சமூட்டுங்கள். அவர்கள் அதற்குப் பதிலளிக்கவில்லையெனில் படுக்கையில் அவர்களை ஒதுக்கி நடந்துகொள்ளுங்கள். அவளுடன் உடலுறவில் ஈடுபடாது திரும்பிப் படுத்துக்கொள்ளவும். அவர்கள் அதற்கும் பதிலளிக்கவில்லையெனில் அவர்களை காயமேற்படாதவாறு அடியுங்கள். அவர்கள் கட்டுப்பட்டுவிட்டால் அநீதியாகவோ கண்டிப்பதன் மூலமோ அவர்கள் மீது வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் விட மிக உயர்ந்தவன், தனது உள்ளமையிலும் பண்புகளிலும் மிகப் பெரியவன். எனவே அவனையே அஞ்சுங்கள்.