×
النساءவசனம் 21

அல்-முக்தஸர்

وَكَيْفَ تَأْخُذُونَهُۥ وَقَدْ أَفْضَىٰ بَعْضُكُمْ إِلَىٰ بَعْضٍ وَأَخَذْنَ مِنكُم مِّيثَـٰقًا غَلِيظًا ﴿٢١﴾

நீங்கள் ஒருவருக்கொருவர் இணைந்து இன்பம் அனுபவித்து ஒருவர் மற்றவரின் இரகசியங்களை அறிந்தபிறகு எவ்வாறு உங்களால் அளித்த மணக்கொடையை திரும்பப் பெற முடியும்? இதன்பிறகும் நீங்கள் அவர்களிடம் இருக்கும் செல்வத்தை விரும்புவது பாவமான, அவலட்சனமான காரியமாகும். உங்களிடம் அவர்கள் மிக உறுதியான ஒப்பந்தத்தையும் எடுத்துள்ளார்கள். அது அல்லாஹ்வுடைய மார்க்கத்தின்படி அவர்களை ஆகுமாக்கிக் கொள்வதாகும்.