×

النساء

வசனம் 176

அல்-முக்தஸர்

يَسْتَفْتُونَكَ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِى ٱلْكَلَـٰلَةِ ۚ إِنِ ٱمْرُؤٌا۟ هَلَكَ لَيْسَ لَهُۥ وَلَدٌ وَلَهُۥٓ أُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ۚ وَهُوَ يَرِثُهَآ إِن لَّمْ يَكُن لَّهَا وَلَدٌ ۚ فَإِن كَانَتَا ٱثْنَتَيْنِ فَلَهُمَا ٱلثُّلُثَانِ مِمَّا تَرَكَ ۚ وَإِن كَانُوٓا۟ إِخْوَةً رِّجَالًا وَنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ ٱلْأُنثَيَيْنِ ۗ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ أَن تَضِلُّوا۟ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ ﴿١٧٦﴾

தூதரே! அவர்கள் கலாலாவைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கலாலா என்பது தந்தையும் பிள்ளைகளும் இன்றி மரணமடைந்தவரின் சொத்தாகும். நீர் கூறுவீராக, அல்லாஹ் அதனைக் குறித்து தெளிவுபடுத்துகிறான்: “இறந்தவருக்கு தந்தையோ பிள்ளைகளோ இல்லாமல் உடன்பிறந்த சகோதரியோ அல்லது தந்தைவழிச் சகோதரியோ மட்டும் இருந்தால் அவர் விட்டுச் சென்றவற்றில் அவளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதி அளவு சொத்து உண்டு. அவருக்கு உடன்பிறந்த சகோதரனோ அல்லது தந்தைவழிச் சகோதரனோ மட்டும் இருந்து சொத்து பெறக்கூடிய வேறு யாரும் இல்லையெனில் அவர் இறந்தவரின் சொத்துக்கு முழு வாரிசாவார். சொத்து பெறக்கூடிய வேறு யாரேனும் இருந்தால் அவரது பங்குபோக மீதமுள்ள அனைத்தையும் இவர் பெறுவார். இறந்தவருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட உடன்பிறந்த சகோதரிகளோ அல்லது தந்தைவழிச் சகோதரிகளோ இருந்தால் மூன்றில் நிர்ணயிக்கப்பட்ட இரு பங்கை அவர்கள் பெறுவார்கள். ஒன்றிற்கு மேற்பட்ட உடன்பிறந்த அல்லது தந்தைவழிச் சகோதரர்களும் சகோதரிகளும் இருந்தால் அவர்கள் இறந்தவரின் சொத்துக்கு முழு வாரிசாவார்கள். இதில் பெண்களைப் போன்று ஆண்களுக்கு இரு பங்கு தரப்பட்ட வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு கலாலா குறித்த சட்டங்களையும் பிற சட்டங்களையும் தெளிவுபடுத்துகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.