அல்-முக்தஸர்
لَّـٰكِنِ ٱللَّهُ يَشْهَدُ بِمَآ أَنزَلَ إِلَيْكَ ۖ أَنزَلَهُۥ بِعِلْمِهِۦ ۖ وَٱلْمَلَـٰٓئِكَةُ يَشْهَدُونَ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا ﴿١٦٦﴾
தூதரே! யூதர்கள் உம்மை நிராகரித்தால் உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான். அதில் அவன் அடியார்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தனது விருப்பு வெறுப்புக்களை உள்ளடக்கிய கல்வியை அதிலே இறக்கியுள்ளான். நீர் கொண்டுவந்தது உண்மையே என அல்லாஹ்வின் சாட்சியோடு வானவர்களும் சாட்சி கூறுகிறார்கள். சாட்சி கூறுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனுடைய சாட்சியம் மற்ற அனைவரின் சாட்சியத்தைக் காட்டிலும் போதுமானது.