×

النساء

வசனம் 141

அல்-முக்தஸர்

ٱلَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمْ فَإِن كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ ٱللَّهِ قَالُوٓا۟ أَلَمْ نَكُن مَّعَكُمْ وَإِن كَانَ لِلْكَـٰفِرِينَ نَصِيبٌ قَالُوٓا۟ أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ وَنَمْنَعْكُم مِّنَ ٱلْمُؤْمِنِينَ ۚ فَٱللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ وَلَن يَجْعَلَ ٱللَّهُ لِلْكَـٰفِرِينَ عَلَى ٱلْمُؤْمِنِينَ سَبِيلًا ﴿١٤١﴾

(அந்த நயவஞ்சகர்கள்) உங்களுக்கு ஏற்படும் நன்மையையும் தீமையையும் எதிர்பார்ப்பவர்கள்; அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு உதவி கிடைத்து போர்ச் செல்வங்கள் கிடைத்துவிட்டால் அதனைப் பெறுவதற்காக, “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா? நீங்கள் கலந்துகொண்டதில் நாங்களும் கலந்து கொள்ளவில்லையா?” என்று கூறுகிறார்கள். நிராகரிப்பாளர்களுக்கு ஏதேனும் பங்கு கிடைத்துவிட்டால், “நாங்கள் உங்களது காரியங்களைப் பொறுப்பேற்று பராமரித்து உதவிசெய்துகொண்டு உங்களுடன் இருக்கவில்லையா, உங்களுக்கு உதவி புரிந்து நம்பிக்கையாளர்களை கைவிட்டு உங்களைப் பாதுகாக்கவில்லையா?” என்று கூறுகிறார்கள். அல்லாஹ்வே மறுமைநாளில் உங்களிடையே தீர்ப்பளிப்பான். நம்பிக்கையாளர்களுக்கு கூலியாக அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். நயவஞ்சகர்களுக்குத் தண்டனையாக அவர்களை நரகத்தின் அடித்தளத்தில் சேர்த்துவிடுவான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின்மீது நிராகரிப்பாளர்களுக்கு ஒருபோதும் ஆதிக்கம் வழங்கிவிட மாட்டான். மாறாக நம்பிக்கையாளர்கள் மார்க்கத்தை நடைமுறைப்படுத்தி நம்பிக்கையில் உண்மையாளர்களாக இருக்கும் வரை இறுதி முடிவை அவர்களுக்கு சாதகமாகவே ஆக்குவான்.