அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ بِٱلْقِسْطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰٓ أَنفُسِكُمْ أَوِ ٱلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَٱللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُوا۟ ٱلْهَوَىٰٓ أَن تَعْدِلُوا۟ ۚ وَإِن تَلْوُۥٓا۟ أَوْ تُعْرِضُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا ﴿١٣٥﴾
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! எல்லா சூழ்நிலைகளிலும் நீதியை நிலைநாட்டி,அனைவருக்கும் உண்மையான சாட்சி சொல்லக்கூடியவர்களாக இருங்கள். அது உங்களுக்கோ உங்களின் தாய்தந்தையருக்கோ உறவினருக்கோ எதிராக உண்மையை ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரியே. ஒருவரின் ஏழ்மையோ செல்வமோ சாட்சியளிக்கவோ அதனை விட்டுவிடவோ உங்களைத் தூண்டிவிட வேண்டாம். உங்களை விட அல்லாஹ்வே ஏழைக்கும் செல்வந்தனுக்கும் நெருக்கமானவன். அவர்கள் இருவரின் நலன்களையும் அவனே நன்கறிந்தவன். சாட்சி கூறும்போது உங்களின் மனஇச்சையைப் பின்பற்றாதீர்கள். அவ்வாறு செய்தால் சத்தியத்தைவிட்டும் பிறழ்ந்துவிடுவீர். நீங்கள் உரிய முறைப்படி சாட்சிகூறாது அதனைத் திரிபுபடுத்தினால் அல்லது சாட்சிகூறாமல் நீங்கள் புறக்கணித்துவிட்டால் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன்.