×

النساء

வசனம் 115

அல்-முக்தஸர்

وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ ٱلْمُؤْمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِۦ جَهَنَّمَ ۖ وَسَآءَتْ مَصِيرًا ﴿١١٥﴾

யார் தூதருடன் முரண்பட்டு, அவர் கொண்டு வந்தது சத்தியம்தான் என்பதைத் தெளிவாக அறிந்தபின்னரும் அதற்கு மாறாகச் செயல்படுவாரோ, நம்பிக்கைகொண்டவர்களின் பாதையை விடுத்து வேறு பாதையைப் பின்பற்றிச் செல்வாரோ - அவர் தமக்காக தேர்ந்தெடுத்தவற்றிலேயே அவரை நாம் விட்டுவிடுவோம். வேண்டுமென்றே அவர் சத்தியத்தை மறுத்ததனால் நாம் அவருக்கு வழிகாட்ட மாட்டோம். அவரை நரகத்தில் பிரவேசிக்கச் செய்வோம். அதன் வெப்பத்தை அவர் அனுபவிப்பார். நரகவாதிகளுக்கு அது மோசமான திரும்புமிடமாகும்.