×

النساء

வசனம் 113

அல்-முக்தஸர்

وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُۥ لَهَمَّت طَّآئِفَةٌ مِّنْهُمْ أَن يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمْ ۖ وَمَا يَضُرُّونَكَ مِن شَىْءٍ ۚ وَأَنزَلَ ٱللَّهُ عَلَيْكَ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُن تَعْلَمُ ۚ وَكَانَ فَضْلُ ٱللَّهِ عَلَيْكَ عَظِيمًا ﴿١١٣﴾

தூதரே! அல்லாஹ் உம்மைப் பாதுகாத்து அருள் புரியவில்லையென்றால் தமக்குத் தாமே துரோகமிழைக்கும் இவர்களில் ஒரு கூட்டத்தினர் சரியான தீர்ப்பை விட்டும் உம்மை வழிகெடுக்க முடிவுசெய்து, நீரும் நியாயமின்றி தீர்ப்பளித்திருப்பீர். உண்மையில் அவர்கள் தங்களைத் தாங்களே வழிகெடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் வழிகெடுப்பதற்காக அவர்கள் செய்யும் செயல்களின் விளைவு அவர்களின் பக்கமே திரும்பும். உமக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பிருப்பதால் அவர்களால் உமக்கு எந்தத்தீங்கையும் இழைக்க முடியாது. அல்லாஹ் உம்மீது குர்ஆனையும், சுன்னாவையும் இறக்கியுள்ளான். இதற்கு முன்னர் நீர் அறியாத ஒளியையும் நேர்வழியையும் கற்றுத் தந்துள்ளான். நபித்துவம் மற்றும் தவறிலிருந்து பாதுகாப்பு என்பவற்றின் மூலம் அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடை மகத்தானது.