×

النساء

வசனம் 105

அல்-முக்தஸர்

إِنَّآ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ بِمَآ أَرَىٰكَ ٱللَّهُ ۚ وَلَا تَكُن لِّلْخَآئِنِينَ خَصِيمًا ﴿١٠٥﴾

தூதரே! சத்தியத்தை உள்ளடக்கியுள்ள குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம், மக்களின் ஒவ்வொரு விவகாரங்களிலும் அல்லாஹ் உமக்குக் கற்றுத்தந்தபடி - உம் மனஇச்சைப்படியோ சுயஅறிவின்படியோ அல்ல - நீர் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக. தமக்குத் தாமே துரோகம் செய்து, நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றில் மோசடி செய்பவர்களிடத்தில் தமது உரிமையைக் கேட்போரைத் தடுத்து வாதாடுபவராக ஆகிவிடாதீர்.