அல்-முக்தஸர்
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ ﴿٨﴾
உறுதியான கல்வியைப் பெற்ற அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழிகாட்டிய பிறகு எங்கள் உள்ளங்களை சத்தியத்தை விட்டும் தடுமாறச் செய்துவிடாதே. சத்தியத்தை விட்டும் பிறழ்ந்த வழிகேடர்களுக்கு ஏற்பட்டதிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக! எங்கள் உள்ளத்திற்கு நேரான வழியைக்காட்டக்கூடிய, வழிகேட்டிலிருந்து எங்களைப் பாதுகாக்கக்கூடிய உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக. எங்கள் இறைவா! நிச்சயமாக நீ தாராளமாக வழங்கக்கூடியவன்.”