×

آل عمران

வசனம் 73

அல்-முக்தஸர்

وَلَا تُؤْمِنُوٓا۟ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمْ قُلْ إِنَّ ٱلْهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤْتَىٰٓ أَحَدٌ مِّثْلَ مَآ أُوتِيتُمْ أَوْ يُحَآجُّوكُمْ عِندَ رَبِّكُمْ ۗ قُلْ إِنَّ ٱلْفَضْلَ بِيَدِ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ﴿٧٣﴾

“உங்களின் யூத மதத்தில் இருப்பவர்களை மட்டுமே நம்பிப் பின்பற்றுங்கள்” என்றும் கூறுகிறார்கள். தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ் காட்டிய வழியே சத்தியத்திற்கான வழியாகும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு போன்று மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டுவிடும் என்ற பயத்தால் அல்லது அவர்கள் மீது இறக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டால் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவார்களே என்ற பயத்தினால் நீங்கள் கொண்டிருக்கும் நிராகரிப்பும் பிடிவாதமும் சத்தியத்திற்கான வழி அல்ல.” தூதரே நீர் கூறுவீராக: “சிறப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளன. அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றை வழங்குகிறான். அவன் தன் அருளை ஒரு சமூகத்தோடு மட்டும் சுருக்கிவிட மாட்டான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன்; அதற்குத் தகுதியானவர்களையும் நன்கறிந்தவன்.