அல்-முக்தஸர்
هُوَ ٱلَّذِى يُصَوِّرُكُمْ فِى ٱلْأَرْحَامِ كَيْفَ يَشَآءُ ۚ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ ﴿٦﴾
அவனே உங்கள் அன்னையரின் வயிற்றில் தான் நாடியவாறு ஆணாகவோ பெண்ணாகவோ, அழகாகவோ அசிங்கமாகவோ, வெள்ளையாகவோ கருப்பாகவோ பல தோற்றங்களிலும் உங்களை வடிவமைக்கிறான். அவனைத்தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன். எதுவும் அவனை மிகைத்துவிட முடியாது. படைப்புகள் விஷயத்தில் தான் வழங்கும் சட்டங்களில், கட்டளைகளில் அவன் ஞானம்மிக்கவன்.