அல்-முக்தஸர்
قَالَتْ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِى بَشَرٌ ۖ قَالَ كَذَٰلِكِ ٱللَّهُ يَخْلُقُ مَا يَشَآءُ ۚ إِذَا قَضَىٰٓ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ﴿٤٧﴾
கணவனின்றி தனக்கு குழந்தை பிறப்பதை ஆச்சர்யமாகக் கருதிய மர்யம் கேட்டார்: “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? என்னை எந்த ஆணும் முறையாகவோ தவறாகவோ நெருங்கியதில்லையே?” வானவர் கூறினார்: “தந்தையின்றி உங்களுக்கு குழந்தையை அவன் தந்தது போன்றே தான் ஏற்படுத்திய வழக்கத்திற்கு மாறாக தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் ‘ஆகிவிடு’ என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். அவனை எதுவும் தடுக்க முடியாது.