அல்-முக்தஸர்
مِن قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَأَنزَلَ ٱلْفُرْقَانَ ۗ إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِ ٱللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ۗ وَٱللَّهُ عَزِيزٌ ذُو ٱنتِقَامٍ ﴿٤﴾
தூதரே! உண்மையான செய்திகளையும் நீதிமிக்க சட்டங்களையும் உள்ளடக்கிய குர்ஆனை உம்மீது அவன் இறக்கியுள்ளான். அது முந்தைய இறைவேதங்களை உண்மைப்படுத்துகிறது. அவற்றிற்கிடையே எந்த முரண்பாடும் இல்லை. அவன் உம்மீது குர்ஆனை இறக்குவதற்கு முன்னால் மூசாவின்மீது தவ்ராத்தையும் ஈசாவின்மீது இன்ஜீலையும் இறக்கினான். இந்த இறைவேதங்கள் அனைத்தும் மக்களின் ஈருலக நலவுகளுக்கும் வழிகாட்டியாகும். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறிவிக்கக்கூடிய, வழிகேட்டிலிருந்து நேர்வழியைத் தெளிவுபடுத்தக்கூடியவற்றையும் அவன் இறக்கினான். அல்லாஹ் உம்மீது இறக்கிய வசனங்களை நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தூதர்களை நிராகரித்து அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் தண்டிக்கக்கூடியவன்.