×

آل عمران

வசனம் 26

அல்-முக்தஸர்

قُلِ ٱللَّهُمَّ مَـٰلِكَ ٱلْمُلْكِ تُؤْتِى ٱلْمُلْكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلْمُلْكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُ ۖ بِيَدِكَ ٱلْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ﴿٢٦﴾

தூதரே! உம் இறைவனைப் புகழ்ந்தவாறும் கண்ணியப்படுத்தியவாறும் நீர் கூறுவீராக: “இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீதான் ஆட்சியதிகாரத்திற்கு அதிபதியாக இருக்கின்றாய். உன் படைப்புகளில் நீ நாடியவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்குகின்றாய். நீ நாடியவர்களிடமிருந்து அதனைப் பறித்து விடுகின்றாய். அவர்களில் நீ நாடியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ நாடியவர்களை இழிவுபடுத்துகின்றாய். இவையனைத்திலும் உன்னுடைய ஞானமும் நீதியும் அடங்கியுள்ளது. உன் கைவசம்தான் நன்மைகள் அனைத்தும் உள்ளன. நீ எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாவாய்.