அல்-முக்தஸர்
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ ﴿٢﴾
அல்லாஹ்தான் உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனைத்தவிர வணங்குவதற்குத் தகுதியான வேறு யாரும் இல்லை. மரணமோ குறைகளோ அற்ற முழுமையான வாழ்க்கையைப் பெற்ற நித்திய ஜீவன். தனித்து நிற்பவன். படைப்புகள் அனைத்தையும் விட்டும் தேவையற்றவன். படைப்புகள் அனைத்தும் அவன் மூலமே உருவாகின. எல்லா சூழ்நிலைகளிலும் அவனிடம் தேவையுடையவையாக இருக்கின்றன.