×

آل عمران

வசனம் 195

அல்-முக்தஸர்

فَٱسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّى لَآ أُضِيعُ عَمَلَ عَـٰمِلٍ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ ۖ بَعْضُكُم مِّنۢ بَعْضٍ ۖ فَٱلَّذِينَ هَاجَرُوا۟ وَأُخْرِجُوا۟ مِن دِيَـٰرِهِمْ وَأُوذُوا۟ فِى سَبِيلِى وَقَـٰتَلُوا۟ وَقُتِلُوا۟ لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ثَوَابًا مِّنْ عِندِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عِندَهُۥ حُسْنُ ٱلثَّوَابِ ﴿١٩٥﴾

இறைவன் அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தான்: ஆணாயினும் பெண்ணாயினும் உங்களின் செயல்கள் சிறியதோ பெரியதோ அவற்றின் நன்மைகளை நான் வீணாக்கிவிட மாட்டேன். மார்க்க விடயத்தில் நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் சமமானவரே. ஆண்கள் என்பதற்காக அதிகரிக்கப்படவும்மாட்டாது. பெண்கள்என்பதற்காக குறைக்கப்படவும்மாட்டாது. அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்கள், நிராகரிப்பாளர்களால் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், தங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டதால் துன்பங்களை அடைந்தவர்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர்கள், அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அதில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் செய்த பாவங்களை மறுமைநாளில் நான் மன்னிப்பேன். அவற்றைக் கண்டுகொள்ளமாட்டேன். அவர்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வேன். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இது அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நன்மையாகும். அவனிடமே ஈடிணையற்ற அழகிய கூலி இருக்கின்றது.