×

آل عمران

வசனம் 187

அல்-முக்தஸர்

وَإِذْ أَخَذَ ٱللَّهُ مِيثَـٰقَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ لَتُبَيِّنُنَّهُۥ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُۥ فَنَبَذُوهُ وَرَآءَ ظُهُورِهِمْ وَٱشْتَرَوْا۟ بِهِۦ ثَمَنًا قَلِيلًا ۖ فَبِئْسَ مَا يَشْتَرُونَ ﴿١٨٧﴾

தூதரே! வேதம்வழங்கப்பட்ட யூத மற்றும் கிருஸ்தவ அறிஞர்களிடம், “அல்லாஹ்வின் வேதத்தை நீங்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; அதிலுள்ள நேர்வழியையும் முஹம்மதின் தூதுத்துவத்தை அறிவிக்கக்கூடியதையும் மறைத்துவிடக்கூடாது” என்று அல்லாஹ் உறுதியான ஒப்பந்தம் வாங்கியதை நினைவுகூர்வீராக. அவர்கள் அந்த ஒப்பந்தத்தைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிட்டார்கள். சத்தியத்தை மறைத்து அசத்தியத்தை வெளிப்படுத்தினார்கள். அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை அவர்களுக்கு சில வேளை கிடைக்கும் பணம், பதவி போன்ற அற்ப கிரயத்திற்காக விற்றுவிட்டார்கள். அல்லாஹ்வின் ஒப்பந்ததிற்குப் பகரமாக இவர்கள் பெற்றுக்கொண்ட இந்தக் கிரயம் மோசமானதாகும்.