×

آل عمران

வசனம் 178

அல்-முக்தஸர்

وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّمَا نُمْلِى لَهُمْ خَيْرٌ لِّأَنفُسِهِمْ ۚ إِنَّمَا نُمْلِى لَهُمْ لِيَزْدَادُوٓا۟ إِثْمًا ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِينٌ ﴿١٧٨﴾

தங்கள் இறைவனை நிராகரித்து அவனுடைய சட்டங்களுக்கு மாறாகச் செயல்படுபவர்கள், தமது இறைநிராகரிப்பில் தமக்கு வழங்கப்பட்ட அவகாசத்தையும் நீண்ட ஆயுளையும் தமக்கு நன்மையென எண்ணிவிட வேண்டாம். அவர்கள் எண்ணுவது போலல்ல. நாம் அவர்களுக்கு அவகாசம் அளிப்பதெல்லாம் அவர்களின் பாவச்சுமைகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவர்களுக்கு இழிவுதரும் வேதனை உண்டு.