அல்-முக்தஸர்
ٱلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِلَّهِ وَٱلرَّسُولِ مِنۢ بَعْدِ مَآ أَصَابَهُمُ ٱلْقَرْحُ ۚ لِلَّذِينَ أَحْسَنُوا۟ مِنْهُمْ وَٱتَّقَوْا۟ أَجْرٌ عَظِيمٌ ﴿١٧٢﴾
அல்லாஹ்வுடைய பாதையில் "ஹம்ராவுல்அஸத்" என்ற போரில் இணைவைப்பாளர்களுடன் போரிடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டபோது உஹதுப்போரில் காயமுற்றிருந்தும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட கட்டளைக்கு அவர்கள் கட்டுப்பட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் அழைத்தபோது தங்களின் காயங்களைக் காட்டி அவர்கள் பின்தங்கிவிடவில்லை. அவர்களில் சிறந்த முறையில் செயல்பட்டு, அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு அவனிடம் சுவனம் என்னும் மகத்தான கூலி காத்திருக்கின்றது.