அல்-முக்தஸர்
فَرِحِينَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ وَيَسْتَبْشِرُونَ بِٱلَّذِينَ لَمْ يَلْحَقُوا۟ بِهِم مِّنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿١٧٠﴾
அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளினால் நிம்மதி அவர்களைச் சூழ்ந்து கொள்ளும், மகிழ்ச்சி அவர்களைத் தழுவிக் கொள்ளும். இன்னும் வந்துசேராமல் இவ்வுலகில் தங்கியிருக்கும் தங்களின் சகோதரர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டால் இவர்கள் பெற்ற அதே அருட்கொடைகளை அவர்களும் பெறுவார்கள் என்பதனால் அவ்வாறு எதிர்பார்க்கின்றனர். எதிர்காலத்தில் நிகழக்கூடிய மறுமையின் நிகழ்வுகளை எண்ணி அவர்கள் அச்சம்கொள்ள மாட்டார்கள். இவ்வுலகில் இழந்துவிட்டவற்றை எண்ணியும் அவர்கள் கவலைகொள்ள மாட்டார்கள்.