அல்-முக்தஸர்
وَمَا كَانَ لِنَبِىٍّ أَن يَغُلَّ ۚ وَمَن يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۚ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ ﴿١٦١﴾
போர்ச் செல்வங்களில் எதனையும் எடுத்து மோசடி செய்வது இறைத்தூதர்களில் எவருக்கும் உகந்த காரியம் அல்ல. அல்லாஹ் பிரத்யேகமாக அவருக்கென அனுமதித்ததைத் தவிர. உங்களில் போர்ச் செல்வங்களில் மோசடி செய்பவர்கள் மறுமைநாளில் அம்பலப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். படைப்பினங்களுக்கு முன்னால் தான் செய்த மோசடியோடு அவன் வருவான். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்தவற்றுக்கான கூலி குறைவின்றி முழுமையாக வழங்கப்படும். அவர்களின் தீமைகள் அதிகரிக்கப்பட்டோ நன்மைகள் குறைக்கப்பட்டோ அவர்கள்மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது.