அல்-முக்தஸர்
إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوْا۟ مِنكُمْ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ إِنَّمَا ٱسْتَزَلَّهُمُ ٱلشَّيْطَـٰنُ بِبَعْضِ مَا كَسَبُوا۟ ۖ وَلَقَدْ عَفَا ٱللَّهُ عَنْهُمْ ۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٌ ﴿١٥٥﴾
முஹம்மதின் தோழர்களே! முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் மோதிக் கொண்ட உஹதுப்போரில் உங்களில் தோல்வியடைந்தவர்களை ஷைத்தான்தான் -அவர்கள் சம்பாதித்த சில பாவங்களின் காரணமாக சறுகச் செய்துவிட்டான். அல்லாஹ் தன் அருளாலும் கருணையாலும் அவர்களைத் தண்டிக்காமல் மன்னித்து விட்டான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவன் உடனுக்குடன் தண்டித்துவிடாத சகிப்புத்தன்மை மிக்கவனாக இருக்கின்றான்.